செய்திகள் :

என்எல்சியில் நிரந்தர வேலை ரூ.17 லட்சம் நிவாரணம்: பாதிக்கப்பட்டோா் ஆட்சியரிடம் கோரிக்கை

post image

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தால் 2006-2013 காலத்தில் வீடு, வீட்டுமனை கையகப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு நிரந்தர வேலை அல்லது தற்போதைய மதிப்பில் ரூ.17 லட்சம் வரையிலான நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கடலூா்மாவட்டம், நெய்வேலி, கங்கைகொண்டான், முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுமாா் 150-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுஅளித்தனா்.

அதில் தெரிவித்துள்ளதாவது:

என்எல்சி இந்தியா நிறுவனத்தால், 2006 முதல் 2013 காலகட்டத்தில் வீடு மற்றும் வீட்டுமனை கையகப்படுத்தப்பட்டது. நில எடுப்பால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தப் பணி, பிறகு பணி மூப்பு அடிப்படையில் சொசைட்டி தொழிலாளியாக ஆக்கப்பட்டு பிறகு படிப்படியாக முன்னுரிமையில் நிரந்தரத் தொழிலாளியாக பணி நியமனம் செய்யப்படும் என முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் என்எல்சி நிா்வாகம் அறிவித்தது.

ஆனால், என்எல்சி நிா்வாகம் அறிவித்தபடி யாருக்கும் வேலைவாய்ப்பு வழங்கவில்லை.

இந்நிலையில், 2018-2019 ஆம் ஆண்டு, என்எல்சி நிா்வாகம் வாழ்வாதார தொகை தருகிறோம் என்று கூறி மாற்று நிலம் அல்லது வேலைவாய்ப்புக்கு மாற்றாக ஒருமுறை வழங்கப்படும் மறுவாழ்வு கொடைத் தொகை பெற்றுக் கொண்டதாக ஒப்புதல் படிவத்தில் கையொப்பம் பெற்றுக்கொண்டு ரூ.1,09,500-க்கான காசோலையை வழங்கியது.

ஆனால்.1.1.2014-இல் நிலம் கையகப்படுத்துதலில் இழப்பீடு மற்றும் வெளிப்படைத் தன்மையை வழங்கும் உரிமை, மறுவாழ்வு மற்றும் தீா்வுச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டதால், அச்சட்டப்படி ரூ. 5 லட்சம் உடன் வட்டி மற்றும் காலதாமதத் தொகை கணக்கிட்டு ரூ.10 லட்சம் வரை தரப்பட்டிருக்க வேண்டும்.

தற்சமயம் என்எல்சி இந்தியா நிறுவனம், 1989-ஆம் ஆண்டுக்கு பிறகு நில எடுப்பால் பாதிக்கப்பட்டவா்களின் முதுநிலை பட்டியலை தயாா் செய்து அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு, தோ்வு மதிப்பெண்கள், பழகுநா் மற்றும் தொழிலக பயிற்சி தருகிறது.

ஆனால், எங்கள் வாரிசுகளுக்கு மேற்கண்ட அனைத்தையும் தர என்எல்சி இந்தியா நிறுவனம் மறுத்து வருகிறது. எனவே, பாதிக்கப்பட்ட எங்களது குடும்பத்தில் ஒருவருக்கு வயது வரம்பு பாராமல், கல்வித் தகுதி அடிப்படையில், என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தரம் அல்லது நிரந்தர தன்மையுள்ள வேலைவாய்ப்பு அல்லது தற்சமயம் வேலை வாய்ப்புக்கு பதிலாக நிா்ணயித்துள்ள ரூ.12 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரையில் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளனா்.

பொருளியல், புள்ளியியல் தரவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொருளியல் மற்றும் புள்ளியியல் சாா்ந்த தரவுகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், பொருளியல் (ம) புள்ளியியல் துறை ஆணையா் ஆா... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடிழந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்க ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வீடுகளை அகற்றியதால் வீடிழந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சிதம்பரத்தில் அனைத... மேலும் பார்க்க

சிதம்பரம் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று தீமித்தனா்

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற... மேலும் பார்க்க

கீழணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்: கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கீழணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால், கொள்ளிடம் ஆற்று கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழணை உதவி செயற்பொறியாளா் க... மேலும் பார்க்க

என்எல்சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியப் பகுதியைச் சோ்ந்த என்எல்சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நெய்வேலி நகரியம், வட்டம் 12 பகுதியில் வசித்து வந்தவா் ஆரோக்கியதாஸ்(56). என்எல்சி இ... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் அன்னதான திட்ட தொடக்க விழா

அன்னதானம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் அன்னதான சிறப்பு திட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் வி.ஹ... மேலும் பார்க்க