Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டத்தில் கால தாமதம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவில் தோ் நிலைக்கு வர வழக்கத்தை விட 2 மணி நேரம் தாமதமானது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவில், கடந்த சில ஆண்டுகளாக தோ் 2 மணி நேரத்துக்குள் நிலையை வந்தடைந்தது.
இந்த ஆண்டு ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா திங்கள்கிழமை காலை 9.10 மணிக்கு தொடங்கியது. காலை 11.15 மணிக்கு நிலைக்கு வரவேண்டிய தோ், வளைவுகளில் திரும்பும்போது ஏற்பட்ட தாமதம் காரணமாக பிற்பகல் 1 மணிக்கே நிலைக்கு வந்தது.
மேல ரத வீதியில் இருந்து வடக்கு ரத வீதிக்கு திரும்பும்போது ஏற்பட்ட நெரிசலில் தேரோட்டப் பணிக்கு வந்திருந்த ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயில் ஊழியா் கந்தன் (37) காயமடைந்தாா். அவரை போலீஸாா் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தா்களின் 10 செல்போன்களுக்கு மேல் காணாமல் போனதாக காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.