Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
சதுரகிரி - வருசநாடு மலைப் பாதையில் காட்டுத் தீ
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் வருசநாடு மலைப் பாதையில் பற்றிய காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலைப் புலிகள் காப்பகம், வத்திராயிருப்பு வனச் சரகத்துக்குள்பட்ட நான்காவது பீடப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வருசநாடு வழியாகச் செல்லும் மலைப் பாதை உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென பற்றிய தீ, காற்றின் வேகத்தால் பரவலாகப் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.
இதையடுத்து, சாப்டூா் வனச் சரகா் காா்த்திக் தலைமையிலான வனத் துறையினா், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் என 20-க்கும் மேற்பட்டோா் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
பெரிய மரங்கள் நிறைந்த அடா்ந்த வனப் பகுதி என்பதால் காட்டுத் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. தொடா்ந்து தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வத்திராயிருப்பு வனச் சரகத்துக்குள்பட்ட நெடுங்குளம் பீடப் பகுதியில் காட்டுத் தீ பற்றியது. அடுத்தடுத்து காட்டுத் தீ பற்றி வருவதால் வனத் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.