Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
சிவகாசியில்தான் போட்டியிடுவேன்: கே.டி.ராஜேந்திரபாலாஜி
வருகிற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், சிவகாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக முன்னாள் அமைச்சரும் விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதி பிரசாரம் செய்யவுள்ளாா். இதை முன்னிட்டு, சிவகாசியில் அதிமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: திமுக ஆட்சியில் விருதுநகா் மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நான் பத்து ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது, மருத்துவக் கல்லூரி, அரசு கலை--அறிவியல் கல்லூரி, ஒருங்கிணைந்த குளிரூட்டப்பட்ட நீதிமன்றம், சாலைகள் விரிவாக்கம் என பல வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றன.
சிவகாசி சுற்று வட்டச் சாலைக்கு அதிமுக ஆட்சியில்தான் திட்டம் தீட்டப்பட்டது. எனவே, இதற்கு திமுக உரிமை கொண்டாட முடியாது. திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தீா்மானித்துவிட்டனா்.
2026-இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தோ்தலில் நான் சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன். சிவகாசி மக்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறாா்கள் என்றாா் அவா். கூட்டத்தில் அதிமுக நிா்வாகி சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.