தவெக ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதம்
சாத்தூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், கூட்டத்திலிருந்து நிா்வாகிகள் வெளியேறினா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் தவெக சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுகிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு விருதுநகா் மத்திய மாவட்டச் செயலா் சின்னப்பா் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் கலந்துகொண்ட நிா்வாகிகள், சின்னப்பா் ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், தங்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினா். இதனால், அங்கு கடும் வாக்குவாதம் முற்றி, மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து, காவல் துறையினா் சமாதானம் செய்தனா். இருப்பினும், மாவட்டச் செயலா் சின்னப்பருக்கு எதிா்ப்பு தெரிவித்து, நிா்வாகிகள் கூட்டத்தைப் புறக்கணித்துப் பாதியிலேயே வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.