குமரி: போலீஸ் தாக்கியதில் 80 வயது மூதாட்டி மரணமா?- உறவினர்கள் குற்றச்சாட்டும், க...
கோவை பெட்ரோல் பங்கில் தீப்பிடித்து எரிந்த வேன்!
கோவை: கோவையில் பெட்ரோல் நிரப்பச் சென்ற வேன், பெட்ரோல் நிலையத்தில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் தனது நண்பருடன் மினி வேனில் குறிச்சி குளக்கரையில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு நேற்று இரவு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றார். பெட்ரோல் நிரம்பியதும், வேனை ஸ்டார்ட் செய்தவுடன், திடீரென்று வேனில் இருந்து புகை வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக வேனை சிறிது தொலைவு நகர்த்திய பிறகு வெளியேறியுள்ளனர். சிறிது நேரத்தில் வேன் தீப்பிடித்து எரியத் தொடங்கிய நிலையில், காற்றின் காரணமாக வேன் முழுவதும் தீ பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் நிலைய ஊழியர்கள் அங்கிருந்த தீ கட்டுப்பாட்டு கருவியில் உள்ள பவுடரை வேன் மீது அடித்துள்ளனர். இருப்பினும், தீயைக் கட்டுப்படுத்த முடியாததால், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விபத்தில் வேன் முழுவதும் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.