செய்திகள் :

வரப்பு அமைத்தல், போர்வெல் ரீசார்ஜ், பண்ணைக்குட்டை; பணம் கொடுக்கும் பண்ணை நீர் மேலாண்மை பயிற்சி

post image

தற்போது தென்மேற்குப் பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. அடுத்து வட கிழக்குப் பருவமழை வர இருக்கிறது. மழை பெய்யும்போது நீரை சேமித்தால்தான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு சேமித்து வைக்கும் தண்ணீரையும் பயன்படுத்த முடியும். பண்ணைகளில் மழைநீரை சேமிக்க வேண்டுமென்றால் அதற்கு சில தொழில்நுட்பங்கள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி முறையாக செய்தால் தண்ணீர் பற்றாக்குறையின்றி விவசாயம் செய்ய முடியும்.

கிணறு

அதற்கு வழிகாட்டும் விதமாக பசுமை விகடன் மற்றும்
நேஷனல் அக்ரோ பவுண்டேஷன் இணைந்து பணம் கொடுக்கும் பண்ணை நீர் மேலாண்மை! என்ற பயிற்சியை வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி, சனிக்கிழமை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த இல்லீடு கிராமத்தில் உள்ள நேஷனல் அக்ரோ பவுண்டேஷன் பயிற்சி மையத்தில் நடத்த இருக்கிறது.

இந்தப் பயிற்சியில் வட்டப்பாத்தி எடுத்தல், சொட்டுநீர் மூலமாக சிக்கனமாக நீர்பாசனம் செய்யும் முறைகள், கிணறு மற்றும் போர்வெல்களுக்கு நீர் செறிவூட்டும் முறைகள், பண்ணைக்குட்டை எடுத்தல் ஆகியவற்றை பற்றி வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் பேச இருக்கிறார். பேசுவதோடு களத்தில் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் விளக்க இருக்கிறார்.

அறிவிப்பு

உளி கலப்பை, 5 கலப்பை, ரோட்டோவேட்டர் போன்ற உழவு மூலமாக நிலத்தல் மழை நீரை சேமிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கிறார் நேஷனல் அக்ரோ பவுண்டேஷனைச் சேர்ந்த நீரியல் வல்லுநர் முனைவர் எஸ்.வி.முருகன்.

நாள்: 2-8-25 சனிக்கிழமை.
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை.
இடம்: கிராம மேம்பாட்டு மையம், நேஷனல் அக்ரோ பவுண்டேன், இல்லீடு கிராமம், மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம்.
(மதுராந்தகத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை செல்லும் வழியில் 30 கிலோமீட்டரில் உள்ளது).

அறிவிப்பு

சிறப்பம்சங்கள்
* வரப்பை வலுவாக அமைத்து மழைநீரைச் சேமிக்கும் முறைகள்.
* நிலத்துக்கு ஏற்றாற்போல் பண்ணைக்குட்டையை அமைப்பதற்கான வழிகாட்டல்கள்.
* செயல்படாத ஆழ்துளைக் கிணறுகளில் நீரை பெரும் செயல்முறைகள்.
* பண்ணையில் குழிகள், அகழிகளை அமைத்து நீரை சேமிக்கும் முறைகள்.
* பண்ணையில் நிலத்தடி நீரை சேமிப்பதற்கான வழிகாட்டல்கள்
* பருவ மழையை பயன்படுத்தி நிலத்தடி நீரை பெருக்கும் சூத்திரங்கள்.
இன்னும் இன்னும்...

அனுமதி இலவசம்
முன்பதிவு அவசியம்.

பெயர், முகவரி, செல்போன் எண்ணுடன் 9940022128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளவும்.
நிகழ்வில் மதிய உணவு, தேநீர் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, 99400 22128, 94448 64884

கூகுள் மேப்(பயிற்சி நடைபெறும் இடம்)

https://maps.app.goo.gl/KF5xct4ysj4itMuu8

ஈரோடு மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் பற்றி எரிந்த தீ; புகை மூட்டமான வெண்டிபாளையம் | Photo Album

குப்பைக் கிடங்கில் தீ பற்றி எரிந்ததுகுப்பைக் கிடங்கில் தீ பற்றி எரிந்ததுகுப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்ததுகுப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்ததுகுப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்ததுகுப்பை கிடங்கில் தீ பற்றி ... மேலும் பார்க்க

`500-க்கும் மேற்பட்ட நாட்டு ரக விதைகள்; இயற்கை உணவு வகைகள்'- திருப்பூரில் விதைத் திருவிழா!

நாட்டு ரக விதைகள், 100 அரங்குகள்...தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம், வனத்துக்குள் திருப்பூர் மற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து ஜூலை 26,27... மேலும் பார்க்க

1 ரூபாய்கூட செலவில்லை... `உயிர் கரைசல்' நீங்களே தயார் செய்யலாம்... விவசாயி கண்டுபிடித்த இடுபொருள்...

இயற்கை விவசாயத்தின் முதன்மையான நோக்கம்… ரசாயன நச்சுத்தன்மை இல்லாத ஆரோக்கியமான உணவு உற்பத்தி மற்றும் தற்சார்புடன் கூடிய குறைவான உற்பத்தி செலவு. தமிழ்நாட்டில் உள்ள இயற்கை விவசாயிகள் ஏற்கெனவே பயன்படுத்தி... மேலும் பார்க்க

திண்டுக்கல்: நிலக்கோட்டையில் வளரும் புது விதமான களைகள்; தவிப்பில் விவசாயிகள்; பின்னணி என்ன?

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் அதிக அளவிலான விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதை நெல்களை விதைத்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் தற்போது அறிமுகமே இல்லாத புது விதமான களைகள் வளருகிறது.எவ்வளவு க... மேலும் பார்க்க

Kavuni: 10,000 ஏக்கரில் கவுனி சாகுபடி; போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் அவதி; பின்னணி என்ன?

கவுனி அரிசியானது கருப்பு கவுனி அரிசி என்றும் அழைக்கப்படுகிறது. இது பல்வேறு உடல்நல நன்மைகளைக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, இந்த அரிசி ரகத்தில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் சி... மேலும் பார்க்க

திண்டுக்கல்: கடும் வீழ்ச்சியில் மாம்பழம் விலை; விரக்தியில் மாமரங்களை வெட்டும் விவசாயிகள்!

திண்டுக்கல், மாம்பழ சாகுபடி அதிக அளவில் நடைபெறும் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. குறிப்பாக நத்தம், கோபால்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மாமரங்கள் பல ஆண்டுகளாக வ... மேலும் பார்க்க