இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம்: கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்
பிரபல நடிகைக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்: கன்னட நடிகரின் ரசிகர்கள் மீது போலீஸில் புகார்!
பெங்களூரில் கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகர்களால் நடிகையொருவருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் இப்போது தாய்லாந்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு திரும்பியுள்ளார்.
இந்தநிலையில், அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் நடிகை ரம்யாவுக்கு(திவ்யா ஸ்பந்தனா) மிரட்டல் விடுத்துள்ளதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
நடிகர் தர்ஷனின் தலையீட்டால் அவரது ரசிகர் ரேணுகாசாமி என்பவர் கொடூரமாக கொல்லப்பட்டதாக வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. இந்தநிலையில், ரேணுகாசாமி கொல்லப்பட்ட விவகாரத்தில் அவரது குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற விசாரணை அறிக்கைகளை மேற்கோள் காட்டி தர்ஷனுக்கு எதிராகப் பதிவிட்டிருந்தார் நடிகை ரம்யா.
இதையடுத்து, தர்ஷன் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் நடிகை ரம்யாவுக்கு(திவ்யா ஸ்பந்தனா) மிரட்டல் விடுத்துள்ளதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதிலும் உச்சக்கட்டமாக, ஒரு பெண்ணை உடல் ரீதியாக கொடுமைப்படுத்தும் வக்கிர புத்தியுடன் சில ரசிகர்கள், ரம்யாவை பாலியல் பலாத்காரம் செய்துவிடுவோம் என்றும் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, நடிகை ரம்யா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 43 சமூக ஊடக கணக்குகளிலிருந்து ஆபாச, அருவருக்கத்தக்க, பாலியல் மற்றும் கொலை மிரட்டல்கள் எனக்கு வந்துள்ளன. நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் தனக்கெதிராக கருத்து பதிவேற்றம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம்(இணைய வழி குற்றப்பிரிவு) காவல் துறையால் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடுபெறுவதாக காவல் துறை ஆணையர் சீமந்த் குமார் சிங் செவ்வாய்க்கிழமை(ஜூலை 29) தெரிவித்துள்ளார். துணை ஆணையர் நிலையில் பொறுப்பு வகிக்கும் அதிகாரியொருவரின் தலைமையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழில் குத்து, கிரி, வாரணம் ஆயிரம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரம்யா கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விவகரத்தில் கன்னட சினிமாவில் முன்னணி நட்சத்திரம் சிவராஜ் குமார்(சிவாண்ணா) ரம்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.