கூலி டிரைலர் - புது அப்டேட்!
ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆக. 2-ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இப்படத்தின் டிரைலரும் அதே நாளில் வெளியிடப்படும் என்று திங்கள்கிழமை(ஜூலை 28) மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.