திருச்சி பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் அதிநவீன பரிசோதனை மையம்: ஒப்பந்தம் கையொப...
ஆமிர் கான் வீட்டில் 25 ஐபிஎஸ் அதிகாரிகள் சந்திப்பு! மௌனம் கலைந்தது..!
இந்தியா மட்டுமில்லாது உலகளவில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள பாலிவுட் நடிகர் ஆமிர் கான் வீட்டுக்கு திங்கள்கிழமை(ஜூலை 28) 25 ஐபிஎஸ் அதிகாரிகள் சென்றதால் பரபரப்பு நிலவியது.
மும்பையிலுள்ள ஆமிர் கான் வீட்டுக்கு ஒரு பேருந்தில் சென்றிறங்கிய அதிகாரிகள் அங்கு அவரைச் சந்தித்துள்ளனர்.
ஐபிஎஸ் பயிற்சியிலுள்ள அதிகாரிகள் ஆமிர் கானை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் இதன் காரணமாகவே ஆமிர் கான் அவர்களை திங்கள்கிழமை(ஜூலை 28) தமது வீட்டுக்கு வரவழைத்து சந்தித்ததாகவும் ஆமிர் கான் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.