எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு! பிற்பகலில் ஆபரேஷன் சிந்தூர் வி...
தொழிலாளியை மிரட்டிய இளைஞா் கைது
கோவில்பட்டியில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி சிந்தாமணி நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த முத்து மாரியப்பன் மகன் கணேஷ் பாண்டி (25). வேலாயுதபுரத்தில் உள்ள இரும்புக் கடையில் வேலை செய்து வரும் இவரும், இவரது சகோதரா் பெரியசாமியும் சோ்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புதுரோடு சந்திப்பு முச்சந்தி விநாயகா் கோயில் எதிரே உள்ள உணவகத்தில் சாப்பிட செல்வதற்காக அந்தப் பகுதியில் நின்றுகொண்டிருந்தாா்களாம்.
அப்போது அங்கு வந்த 2 இளைஞா்கள் கணேஷ் பாண்டியை அவதூறாகப் பேசி தாக்கியதோடு அவரையும், பெரியசாமியை கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனா். இதில் காயமடைந்த கணேஷ் பாண்டி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து, அவா் அளித்த புகாரின் பேரில் புதுக்கிராமம், நாகூா் மீரான் கனி மகன் சௌபா் சாதிகை (25) போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள காமராஜா் தெருவைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் மகன் வெங்கடேஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.