``இந்திரா காந்தியின் தைரியத்தில் 50% இருந்தால் கூட..!" - பிரதமர் மோடியை விமர்சித...
நள்ளிரவில் உக்ரைன் மீது ரஷியா பயங்கர தாக்குதல்! 20 பேர் பலி!
உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில், சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் முக்கிய மாகாணங்களின் மீது, ரஷியா நேற்று (ஜூலை 28) நள்ளிரவு முதல் இன்று (ஜூலை 29) அதிகாலை வரை தொடர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது.
சபோரிஷியா மாகாணத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அங்குள்ள சிறைச்சாலை ஒன்று தகர்க்கப்பட்டுள்ளதாக, உக்ரைன் ராணுவ அதிகாரி இவான் ஃபெடோரோவ் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களில், அங்கு 16 பேர் கொல்லப்பட்டதுடன், 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், சிறையின் வளாகத்துக்கு அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கம்யான்ஸ்கே மாகாணத்தின் மீதான ரஷியாவின் வான்வழித் தாக்குதல்களில், 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்களில், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அங்கு இயங்கி வந்த மருத்துவமனை ஒன்று சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ரஷியாவின் தெற்கு மாகாணங்களில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, உக்ரைனுடனான போரை 10 முதல் 12 நாள்களுக்குள், முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்றும், இல்லையென்றால் ரஷியா அரசு கடுமையான தடைகளைச் சந்திக்கக் கூடும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சீன தலைநகரில் தொடரும் கனமழை, வெள்ளம்! 34 பேர் பலி.. 80,000 பேர் வெளியேற்றம்!