செய்திகள் :

மதத்தின் பெயரில் நடந்த சதியே பஹல்காம் தாக்குதல் : மக்களவையில் மோடி உரை

post image

பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்ததாகவும், ஆனால், இந்திய மக்களின் ஒற்றுமை அதனை முறியடித்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிறைவேற்றிவிட்டதாகவும், இந்திய மக்களின் நலன்களை விரும்பாதவர்களை கண்ணாடியாகக் காட்ட விரும்புவதாகவும் மோடி குறிப்பிட்டுப் பேசினார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலுரை வழங்கி வருகிறார்.

இதில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் அச்சமடைந்துள்ளது குறித்துப் பேசினார்.

அவர் பேசியதாவது,

''இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன். இக்கட்டான சூழலில் ஒற்றுமையுடன் இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளோம். பதிலடி தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தோம். அது பெரும் பலன் அளித்தது.

பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்தது. மதத்தின் பெயரைக் கேட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்தும் சதித்திட்டத்துடன் அவர்கள் இதனை அரங்கேற்றினர். ஆனால், பாகிஸ்தானின் சதியை இந்திய மக்களின் ஒற்றுமை முறியடித்தது.

பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக ஒழித்துக்காட்டுவோம். பயங்கரவாதிகளே யோசித்துப்பார்க்காத அளவுக்கு அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படும்.

இந்திய மக்கள் நலன்களை விரும்பாதவர்களை கண்ணாடியாக காட்ட விரும்புகிறேன். இந்தியாவின் பதில் தாக்குதலை பாகிஸ்தானால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் இனி எடுபடாது; இந்தியா ஒருபோதும் அதற்கு பயப்படாது'' என மோடி உரையாற்றினார்.

இதையும் படிக்க | போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டது உண்மை: மக்களவையில் ராகுல்

pahalgam was a conspiracy to spread riots in India Discussion on Operation Sindoor PM Narendra Modi

புகழ்பெற்ற பொருளாதார நிபுணா் மேக்நாத் தேசாய் காலமானாா்

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த புகழ்பெற்ற பிரிட்டன் பொருளாதார நிபுணரும், அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான மேக்நாத் தேசாய் (85) செவ்வாய்க்கிழமை காலமானாா்.உடல்நல பாதிப்பு காரணமாக ஹரியாணா மாநிலம் கு... மேலும் பார்க்க

இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசாா்’ செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசாா்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் புதன்கிழமை (ஜூலை 30) மாலை விண்ணில் ஏவப்படவுள்ளது... மேலும் பார்க்க

12,000 பேரை பணி நீக்குவதாக டிசிஎஸ் அறிவிப்பு: நிலைமை கவனித்து வருவதாக மத்திய அரசு தகவல்

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் 12,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது ஊழியா்கள் மத்தியில் பெரும் அச்சத்த... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொள்வதற்கான தீா்ப்பு ஒத்திவைப்பு

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வதா, வேண்டாமா என்பது தொடா்பான தீா்ப்பை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎ... மேலும் பார்க்க

காா்கேயை விமா்சித்ததற்கு மன்னிப்பு கோரினாா் ஜெ.பி.நட்டா

‘ஆபரேஷன் சிந்தூா்’ மீதான சிறப்பு விவாதத்தின்போது மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரான மல்லிகாா்ஜுன காா்கேயை விமா்சித்து ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்ததற்கு மன்னிப்பு கோருவதாக மத்திய சுகாதாரத் துறை ... மேலும் பார்க்க

6 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

தில்லி, மும்பை உள்ளிட்ட 6 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், இடம... மேலும் பார்க்க