செய்திகள் :

OPS: 'கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது; கடும் கண்டனத்திற்குரியது' - பாஜக அரசுக்கு எதிராக ஓபிஎஸ்

post image

பாஜக கூட்டணியில் இருக்கும் ஓ.பி.எஸ் மத்திய அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அண்மையில் மோடி தமிழ்நாடு வந்த போது, அவரை சந்திக்க நேரம் கேட்டார் ஓ.பி.எஸ். ஆனால், மோடி தரப்பில் இருந்து பதில் வரவில்லை. இந்நிலையில்

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்தல், மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல். அனைத்து குழந்தைகளுக்கும் சம வாய்ப்பினை வழங்குதல், சமூக மற்றும் பாலின இடைவெளிகளைக் குறைத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சமக்ரா சிக்ஷா திட்டம் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்கு அறுபது விழுக்காடு எனவும், மாநில அரசின் பங்கு நாற்பது விழுக்காடு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மோடி
மோடி

2,151 கோடி ரூபாய்..!

சமக்ரா சிக்ஷா நிதி குறித்து அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி அவர்கள், தமிழ்நாடு அரசு முன்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாக 2024-2025 ஆம் ஆண்டு சம்சரா சிக்க்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 2,151 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சமக்ரா சிக்க்ஷா திட்டத்தின் நிதியை நம்பி கிட்டத்தட்ட 65 இலட்சம் மாணவ மாணவியர் தனியார் பள்ளிகளில் கல்வி பெற்று வருவதோடு, தனியார் பள்ளி ஆசிரியர்களும் பானடைந்து வருகிறார்கள் இந்தத் திட்டத்தின்கீழான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப் பணி உள்ளிட்ட பல பணியன் முடங்கிப் போயுள்ளன.

கடும் கண்டனத்திற்குரியது

மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த ஆண்டு 25 விழுக்காடு மாணவ, மாணவியரை தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியரின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய அரசீன் நிபந்தனைகளை மாநில அரசு ஏற்காதது என்பது மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்சனை.

இந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி நிதியை விடுவிக்காமல் இருப்பது அப்பாவி ஏழை எளிய மாணவ, மாணவியரின் கல்வியையும், ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கல்வி உரிமைச் சட்டத்திற்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.

சமக்ரா சிக்க்ஷா
சமக்ரா சிக்க்ஷா

சமக்ரா சிக்க்ஷா திட்டத்தின்கீழ் நிதியை விடுவிக்காதது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் ஏழையெளிய மாணவ, மாணலியரின் கல்வி மற்றும் ஆசிரியர்களை பாதிக்கும் செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, சமக்ரா சிக்க்ஷா திட்டத்தின்கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான 2,150 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று மத்திய அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று வலியுறுத்தி இருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Poonch Shelling Hit: ``22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் ராகுல்" - காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா முன்னெடுத்த ஆப்ரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதில், இந்தியா மீது பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தியது. அதில் பல இந்தி... மேலும் பார்க்க

"என் தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்... அந்த வலி எனக்கு புரியும்" - மக்களவையில் பிரியங்கா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நேற்றில் இருந்து பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து இன்று மக்களவையில் பிரியாங்கா காந்தி... மேலும் பார்க்க

ADMK : 'தென் மாவட்டங்களில் எடப்பாடி; தலைவலியாக 30 தொகுதிகள்!' - எப்படி பிரசாரம் செய்யப்போகிறார்?

'எடப்பாடி சுற்றுப்பயணம்!''மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்...' என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை 49 தொகுதிகளில் பிரசாரத்தை முடித்த... மேலும் பார்க்க

புதுச்சேரி: `10,000 மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டனர்!' - அதிர்ச்சி கொடுக்கும் மத்திய அரசு

முழு வீச்சில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்திய புதுச்சேரி கல்வித்துறைபுதுச்சேரியில் கடந்த 2021-ல் பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும... மேலும் பார்க்க

ADMK: `கூட்டணியில் சசிகலா, டிடிவி தினகரன் வந்தால் அதிமுக நிலைப்பாடு?' - எடப்பாடி சொன்ன பதில்

2026 தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இன்று (ஜூலை 29) சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் மேற... மேலும் பார்க்க