இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம்: கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்
Poonch Shelling Hit: ``22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் ராகுல்" - காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா முன்னெடுத்த ஆப்ரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதில், இந்தியா மீது பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தியது. அதில் பல இந்தியர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், ராகுல் காந்தி பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா, ``ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பூஞ்ச், ரஜோரியில் (மே 7 முதல் 10 வரை) ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சொத்துகளுக்கு சேதமும் ஏற்பட்டது. பேரழிவு தரும் ஷெல் தாக்குதலுக்குப் பிறகு ராகுல் காந்தி பூஞ்ச் மாவட்டத்துக்குச் சென்று துயரமடைந்த குடும்பங்களைச் சந்தித்தார்.

அப்போது பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த பள்ளி செல்லும் குழந்தைகளின் பட்டியலைத் தயாரிக்குமாறு ராகுல் காந்தி எங்களிடம் கேட்டார். அதன்படி, நாங்கள் அந்தப் பட்டியலை அவரிடம் சமர்ப்பித்தோம். 22 குழந்தைகளின் கல்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நிதியுதவி செய்கிறார்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்காக எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பிய நிதி உதவியை வழங்குவதற்காக பூஞ்ச் மாவட்டத்துக்கு செல்வேன். குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சி இது" என்றார்.