யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் கதறியது: பிரதமர் மோடி
உன் தெய்வத்திற்கு சக்தி இல்லை... வெளியானது அவதார் - 3 டிரைலர்!
ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அவதார் - 3 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்ட ஆக்கமாகக் கடந்த 2009 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அவதாரைப் பார்க்காத ரசிகர்கள் இருக்கிறார்களா? என்கிற அளவுக்கு அப்படத்திற்கு வரவேற்பு கிடைத்ததால் 2022-ல் அவதார் - 2 வெளியாகி அதுவும் உலகளவில் ரூ. 15 ஆயிரம் கோடி வசூலைப் பெற்று சக்கைபோடு போட்டது.
இப்போது, ஜேம்ஸ் மேமரூன் அவதார் - ஃபயர் அண்ட் ஆஷ் (avatar - fire and ash) என்கிற மூன்றாம் பாகத்தை உருவாக்கியுள்ளார். பல மொழிகளில் தயாரிக்கப்பட்ட இப்படம் இந்தாண்டு டிசம்பர் 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரம்மாண்ட அனிமேஷன் உருவாக்கங்கள், உணர்வுப்பூர்வமான கதை என காட்சிக்கு காட்சி அவதார் - 3 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.