செய்திகள் :

`நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து' - இந்தியாவின் கிராண்ட் முஃப்தி; நிமிஷா வழக்கின் டைம்லைன்!

post image

ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவிற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் 'கிராண்ட் முஃப்தி' என அழைக்கப்படும் காந்தபுரம் ஏபி அபூபக்கர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

யார் இந்த நிமிஷா பிரியா?

கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா. குடும்பத்தின் பொருளாதாரம் காரணமாக ஏமன் சென்ற இவர், முதலில் அங்கு நர்ஸாக பணிபுரிந்துள்ளார்.

நிமிஷா பிரியா - தலால் அப்து மஹ்தி
நிமிஷா பிரியா - தலால் அப்து மஹ்தி

பின்னர், உள்நாட்டை சேர்ந்த தொழிலதிபர் தலால் அப்து மஹ்தியை பார்ட்னராக கொண்டு ஏமனில் மருத்துவமனை ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

நாள் ஆக ஆக, தலால் அப்து மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்த, நிமிஷா மஹ்தியைக் கொலை செய்திருக்கிறார்.

இந்த வழக்கின் டைம்லைன் இதோ...

2017: அளவுக்கு மீறி மயக்க மருந்தை தலால் அப்து மஹ்திக்கு கொடுத்ததாக நிமிஷா பிரியா மீது வழக்கு தொடரப்பட்டது.

நிமிஷா ஏமனில் இருந்து தப்பி செல்ல முயன்றப்போது, ஏமன் - சவுதி எல்லையில் கைது செய்யப்பட்டார்.

2018: ஏமன் நீதிமன்றத்தில் நிமிஷா பிரியாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

2020: ஏமன் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த நீதிமன்றமும் மரண தண்டனையை உறுதி செய்தது.

நிமிஷா பிரியா வழக்கு
நிமிஷா பிரியா வழக்கு

2023: நிமிஷாவின் மேல்முறையீடு மீண்டும் ஏமனின் உச்ச நீதிமன்ற கவுன்சிலில் ரத்து செய்யப்பட்டது.

ஏப்ரல் 2024: நிமிஷா பிரியாவின் குடும்பம் மஹ்தியின் குடும்பத்திடம் 'பிளட் மணி' குறித்து பேசியது.

ஜூலை 15, 2025: 2025-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி நிமிஷா பிரியாவிற்கு வழங்கப்பட இருந்த மரண தண்டனை தள்ளிப்போடப்பட்டது.

இந்தியாவின் கிராண்ட் முஃப்தி காந்தபுரம் ஏபி அபூபக்கர் ஏமன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தான் முக்கிய காரணம்.

ஏபி அபுபக்கர் முஸ்லியார்
ஏபி அபுபக்கர் முஸ்லியார்

தற்போது

காந்தபுரம் ஏபி அபூபக்கர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனைய ஏமன் அரசு ரத்து செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், இது இன்னமும் முடிவாக இல்லை என்று இந்திய அரசு தரப்பில் கூறப்படுவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Kerala: கன்னியாஸ்திரிகள் கைது விவகாரம்: கொந்தளிக்கும் கட்சிகள்.. கேரள பாஜக தலைவர் சொல்வது என்ன?

கேரள மாநிலம் அங்கமாலி இடவூர் சபை உறுப்பினரான கன்னியாஸ்திரி பிரீதிமேரி, கண்ணூர் தலசேரி உதயகிரி சபை உறுப்பினரான வந்தனா பிரான்ஸிஸ் ஆகியோர் சத்திஸ்கர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆள்கடத்தல் மற்று... மேலும் பார்க்க

``சத்தீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரிகள் கைது; வகுப்புவாத ஆபத்து..'' -மு.க.ஸ்டாலின் கண்டனம்

மனித கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கேரளாவை சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் உள்ள துர்க் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இதனால், நேற்று, கேரளா முழுவ... மேலும் பார்க்க

முடிவுக்கு வந்த தாய்லாந்து - கம்போடியா போர்; மலேசியா பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவு..

எல்லைப் பிரச்னை காரணமாக, கம்போடியா - தாய்லாந்து போர் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. 5 நாள்கள் நடந்த இந்தப் போரில், கிட்டத்தட்ட 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.பிற நாடுகளின... மேலும் பார்க்க

``முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி அளித்ததால், நீதித்துறை மீது திமுக அரசுக்கு கோபம்'' - H.ராஜா

"இந்துக்களுக்கு எதிராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை ஆளக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து, அவர் நீண்ட ஆயுளோடு இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்" என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியுள்ளா... மேலும் பார்க்க

``வீணாக கடலில் கலக்கும் முல்லைப் பெரியாறு நீர்; தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?'' - ஆர்.பி உதயகுமார்

"முல்லைப் பெரியாறு அணையின் நீர் வீணாக கேரளக் கடலில் கலக்கிறது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க