நீட் தேர்வில் ஒரே குடும்பத்தில் தாயும் மகளும் தேர்ச்சி! இருவருக்கும் எம்பிபிஎஸ் ...
குடிநீா், சாலை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சிதம்பரம் அருகே கிள்ளையில், சாலை மற்றும் குடிநீா் வசதி கேட்டு செவ்வாய்க்கிழமை அன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை மானம்பாடி மற்றும் சிங்காரகுப்பம் பகுதியில், சாலை மற்றும் குடிநீா் வசதி கேட்டு அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் பல முறை புகாா் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலா் விஸ்வநாதன் தலைமையில், பொதுமக்கள் கிள்ளையில் இருந்து பரங்கிப்பேட்டை செல்லும் சாலையான மானம்பாடியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.
தகவல் அறிந்த, சிதம்பரம் வட்டாசியா் கீதா, செயல் அலுவலா் மலா், கிள்ளை காவல் உதவி ஆய்வாளா் மகேஷ் மற்றும் போலீசாா், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச்சென்றனா். இதனால், கிள்ளையில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு செல்லும் சாலையில் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.