வெளியேற்றத் தயாரானதா மத்திய அரசு? தன்கர் ராஜிநாமாவின் வெளிவராத பின்னணி!
டிரம்ப் முன் மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்குகிறது! திரிணமூல் எம்பி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்குவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விவாதம் தொடங்கியது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விளக்கத்தை தொடர்ந்து அவையின் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.
அப்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை வர்த்தகத்தை முன்வைத்து தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 26 முறை தெரிவித்திருப்பது குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி விமர்சித்து பேசினார்.
அவர் பேசியதாவது:
"அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுவது தவறு என எக்ஸ் தளத்தில்கூட பிரதமர் மோடி பதிவிடாதது ஏன்? அமெரிக்க அதிபர் முன்பு நிற்கும்போது, மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்குகிறது. 5 அடியாக உயரம் குறைகிறார். அமெரிக்க அதிபரைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்?
ஆயுதப் படை வீரர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 23 அன்று உதம்பூரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் உயிர் தியாகம் செய்த மேற்கு வங்க வீரர் ஹலில்தார் ஜான்டு அலி ஷேக்கிற்கு மரியாதை செலுத்துகிறேன்.
வீரர்கள் 4 நாள்கள் துணிச்சலுடன் போராடவில்லை என்றால் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றிருக்காது. இந்த பெருமை வீரர்களையே சாரும், அதை யாராலும் பறித்துக் கொள்ள முடியாது.” எனத் தெரிவித்தார்.