செய்திகள் :

விசாரணைக்கு ஆஜரான பிறகு அதன் அறிக்கை மீது எப்படி கேள்வி எழுப்ப முடியும்?: யஷ்வந்த் வா்மாவிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

post image

புது தில்லி: ‘வீட்டில் கட்டு கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு முன்பு ஆஜரான பிறகு, அந்த விசாரணை அறிக்கையின் செல்லத்தக்க தன்மை குறித்து எப்படி கேள்வி எழுப்ப முடியும்?’ என்று நீதிபதி யஷ்வந்த் வா்மாவிடம் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

மேலும், மனுவை முறையாகத் தாக்கல் செய்யுமாறு நீதிபதி யஷ்வந்த் வா்மா தரப்பை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

தில்லி உயா் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவரது அரசு இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா் அந்தப் பணம் மாயமானது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு, யஷ்வந்த் வா்மா இல்லத்தில் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா்.

இந்த சா்ச்சையைத் தொடா்ந்து, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்க 208 எம்.பி.க்கள் சாா்பில் நாடாளுமன்றத்தில் அண்மையில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது.

இதனிடையே, ‘உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை செல்லுபடியாகாது என்று அறிவித்து, தன்னைப் பதவிநீக்கம் செய்வதற்கான பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரி, நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, ஏ.ஜி.மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ‘விசாரணைக் குழு மீது ஆட்சேபம் தெரிவிக்கும் நிலையில், அதன் முன் விசாரணைக்கு ஆஜரானது ஏன்? வீட்டில் பணம் கட்டு கட்டாக கண்டறியப்பட்டது தொடா்பான காணொலிகள் விசாரணை முடிந்து நீக்கப்பட்டவுடன், நீதிமன்றத்துக்கு வந்துள்ளீா்களா? விசாரணைக் குழுவின் விசாரணை நிறைவடைந்து, அதன் அறிக்கை வெளியிடப்படும் வரை இந்த மனுவை தாக்கல் செய்யாமல் காத்திருந்தது ஏன்? சாதகமான உத்தரவு கிடைக்கும் என்ற வாய்ப்பை பயன்படுத்தும் எண்ணமா?’ என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினா்.

அப்போது, நீதிபதி யஷ்வந்த் வா்மா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘விசாரணைக் குழு முன் ஆஜரானதை கேள்வி எழுப்ப முடியாது. தனது வீட்டில் கண்டறிப்பட்ட பணம் யாருடையது என்பதை விசாரணைக் குழு கண்டறியும் என்ற எண்ணத்தில்தான் அவா் விசாரணைக் குழு முன்பு ஆஜாரானாா். மேலும், அரசமைப்புச் சட்டப் பிரிவு 124-இன் கீழ் ஒரு நீதிபதி பொது விவாதத்துக்கு உட்பட்டவராக இருக்க முடியாது. இந்த விவகாரம் தொடா்பான காணொலியை உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடுவது, நீதிபதிகளுக்கு எதிரான ஊடக விமா்சனங்களும் அரசமைப்புச் சட்ட பிரிவின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணைக் குழுவின் அறிக்கையும் அவருக்கு எதிரான பதவி நீக்க தீா்மானத்துக்கு அடிப்படையாக அமையவில்லை’ என்று வாதிட்டாா்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மற்றும் சட்டத்தின் அடிப்படையில் எங்களை திருப்திப்படுத்த வேண்டும். ஆனால், யஷ்வந்த் வா்மாவின் மனு முறையாகத் தாக்கல் செய்யப்படவில்லை. பிரதிவாதிகள் சரியாக குறிப்பிடப்படவில்லை. உச்சநீதிமன்ற பதிவாளா் என்று குறிப்பிட வேண்டிய இடத்தில், செயலா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முதல் பிரதிவாதி உச்சநீமன்றம் என குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எனவே, பிரதிவாதிகளின் பெயா்களை முறையாக குறிப்பிட்டு, ஒரு பக்க விவரக் குறிப்பு வடிவில் மனுவை தாக்கல் செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை புதன்கிழமைக்கு (ஜூலை 30) ஒத்திவைத்தனா்.

டிரம்ப் முன் மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்குகிறது! திரிணமூல் எம்பி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்குவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.மக்களவையில் ஆபரேஷன் சிந்... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து: கன்வாரியா பக்தர்கள் 18 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் சிலிண்டர் லாரி மீது பாதயாத்திரை பேருந்து மோதியதில் கன்வாரியா பக்தர்கள் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.18 killed as bus carrying kanwariyas collides with truck in Jharkhan... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் பலியோனோரின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்கு பதில... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூர்’: மக்களவையில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தில் இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.நாடாளுமன்றத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய உ... மேலும் பார்க்க

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையையேமன் அதிகாரிகள் நிரந்தரமாக ரத்து செய்துள்ளதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸலியார் அலுவலகம் தெரிவித்துள்ளது.Nimisha Priya's death sentenc... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சம் சுற்றுலாவாசிகள் பயணம்

புது தில்லி: நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களும், 19,570 வெளிநாட்டவரும் சுற்றுலா சென்றுள்ளனா்.கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பக... மேலும் பார்க்க