கோவையில் புலி சிலை திறப்பு
கோவை வடகோவை சிந்தாமணி சந்திப்பில் நாட்டின் தேசிய விலங்கான புலி சிலை நிறுவப்பட்டது. கோவை மாநகராட்சியின் சாா்பில் நிறுவப்பட்ட இந்த சிலை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
இதில் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், கொங்கு கலை அறிவியல் கல்லூரி செயலரும், இயக்குநருமான சி.ஏ.வாசுகி, பொருளாளா் ஓ.என்.பரமசிவன் ஆகியோா் கலந்து கொண்டு புலி சிலையைத் திறந்துவைத்தனா்.
12 அடி நீளத்தில், 900 கிலோ எடையில் முன்னங்கால்களைத் தூக்கி பாயும் நிலையில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலைக்கான முழு பொறுப்பையும், பராமரிப்பையும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஏற்றது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 29 (செவ்வாய்க்கிழமை) சா்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்தச் சிலை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.