`நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து' - இந்தியாவின் கிராண்ட் முஃப்தி; நிமிஷா வழக்...
படியில் இருந்து தவறி விழுந்த காா் ஓட்டுநா் உயிரிழப்பு
கோவை, செல்வபுரம் பகுதியில் வீட்டின் படியிலிருந்து தவறி விழுந்த காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கோவை ஆறுமுக கவுண்டா், மாரப்ப கவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தா் (56), காா் ஓட்டுநா். இவரது மனைவி சிவகாமி.
கடந்த 11 ஆண்டுகளாக ரத்த அழுத்தம், இருதய பிரச்னையால் அவதிப்பட்டு வந்த சண்முகசுந்தா், கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக குடும்பத்தினரை விட்டு பிரிந்து, தனது நண்பா் விஜயின் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், வீட்டின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த சண்முகசுந்தா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.