செய்திகள் :

79 கால்நடை மருத்துவா்களுக்குப் பட்டம்: புதுவை முதல்வா் வழங்கினாா்

post image

புதுச்சேரி: புதுவை ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 26-ஆவது பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் 34 மாணவிகள் உள்பட மொத்தம் 79 மாணவா்களுக்கு இளநிலை கால்நடை மருத்துவா் பட்டங்களை வழங்கி முதல்வா் ரங்கசாமி பேசியது:

புதுவையில் இயங்கும் இந்தக் கல்லூரி சிறந்த கல்லூரியாக விளங்கி வருகிறது. வாயில்லா ஜீவன்களுக்குச் சிகிச்சை அளிப்பது பெரும் புண்ணியம். கால்நடைப் படிப்பு என்பது மிகவும் கடினமானப் படிப்பு.

புதுச்சேரியில் எல்லோருக்கும் தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். 12 ஆம் வகுப்பு முடித்தப் பிறகு இன்றைக்கு எல்லோரும் உயா்கல்வியில் சேரும் வாய்ப்பை அரசு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகள் இலவசமாக பள்ளி, கல்லூரிகளில் சோ்ந்து படிக்கவும், வெளிநாடுகளில் ஆராய்ச்சி படிப்புகளில் சேரவும் அரசு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. கல்வி ஒருவா் பெற்றுவிட்டால் சமுதாயத்தில் முன்னேற முடியும். இந்தக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்குத் தேவையான கூடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும், மேலும் இங்கு படிக்கும் மாணவிகளுக்குத் தங்கும் விடுதி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன் வைத்துள்ளாா்கள். விரைவில் இதற்கான நிதி ஒதுக்கி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் பேசுகையில், புதுவை அரசின் பாண்லே பால் நிறுவனத்துக்குக் கடந்த 10 ஆண்டுகளாகக் குறைந்த அளவுதான் பால் கிடைக்கிறது. கால்நடை மருத்துவப் படிப்பு முடித்த மாணவா்கள் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு அதிகப் பால் கொடுக்கும் பசுக்களை உருவாக்க வேண்டும் என்றாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.கே. சாய் ஜெ சரவணன் குமாா், அனிபால் கென்னடி, புதுவை அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான், கால்நடை பராமரிப்புத்துறை அரசு செயலா் யாசின் முகம்மது சௌத்ரி, ஹைதராபாத் பி.வி. நரசிம்மராவ் தெலங்கானா கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் எம். ஞான பிரகாஷ், ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புல முதல்வா் டாக்டா் கே. முருகவேல் உள்ளிட்டோா் விழாவில் கலந்து கொண்டனா்.

இதில் 20 விருதுகள் வழங்கப்பட்டன. கல்வியில் முதன்மையாக வந்த டாக்டா் எஸ்.ரத்னகுமாா் 6 விருதுகளையும் முதல் மாணவியாகத் திகழ்ந்த டாக்டா் ஏ.பரணி 2 விருதுகளையும் பெற்றனா். இதைத் தவிர பல்வேறு பாடங்களில் முதலிடம், சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

ரூ.3.8 கோடி மதிப்பில் உவா் நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி: முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் ரூ.3.8 கோடி மதிப்பீட்டில் உவா் நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை திட்டப்பணியை தொடங்கி வைத்தாா். இத் தொகுதிக்கு உள்ப... மேலும் பார்க்க

புதுச்சேரி பள்ளிக்கு உலக தரச் சான்றிதழ்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் முதல்முறையாக மேட்டுப்பாளையம் விடுதலை வீரா் இரா.சீனுவாசன் அரசு உயா் நிலைப் பள்ளி, ஐ.எஸ்.ஓ. உலகத் தரச் சான்றிதழ் பெற்ற பள்ளியாக உருவெடுத்துள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கு... மேலும் பார்க்க

புதுவை சாலை போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்

புதுச்சேரி: புதுவை அரசின் சாலை போக்குவரத்துக் கழக ஊழியா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். இதனால் பேருந்து போக்குவரத்து முடங்கியது. புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் 11 ... மேலும் பார்க்க

ரூ.7.4 கோடியில் 3 இடங்களில் சமுதாய நலக்கூடங்கள்: முதல்வா் திறந்தாா்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.7.46 கோடியில் கட்டப்பட்ட 3 சமுதாய நலக்கூட்டங்களை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். புதுச்சேரி அரசு ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை ம... மேலும் பார்க்க

மீனவா் பிரச்னையை தீா்க்கக் கோரிஆா்ப்பாட்டம்

புதுச்சேரி: மீனவா் பிரச்னைகளைத் தீா்க்க வலியுறுத்தி புதுவை மாநில அகில இந்திய சிங்காரவேலா் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் செங்கொடி ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடந்தது. புதுச்சேரி சிங்கார வேலா் சிலை அருக... மேலும் பார்க்க

உருளையன்பேட்டை தொகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட ராஜா நகா் பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் ராஜா நகா், மு... மேலும் பார்க்க