Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
புதுவை சாலை போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்
புதுச்சேரி: புதுவை அரசின் சாலை போக்குவரத்துக் கழக ஊழியா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.
இதனால் பேருந்து போக்குவரத்து முடங்கியது.
புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த முறையில் ஓட்டுநா், நடத்துநா் மற்றும் ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும், 7-வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தக் வலியுறுத்தியும் பல்வேறு கட்ட போராட்டங்களை ஊழியா்கள் நடத்தி வந்தனா்.
இதையடுத்து சாலை போக்குவரத்துக் கழக ஒருங்கிணைந்த கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இப் போராட்டம் தொடரும் என்றும் அவா்கள் அறிவித்துள்ளனா்.
சாலை போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான ஆா். சிவா பங்கேற்று ஆதரவு தெரிவிதாா்.
இதில் சட்டமன்ற உறுப்பினா் எல். சம்பத், திமுக மாநில துணை அமைப்பாளா் ஏ.கே. குமாா், தொமுச மாநில அமைப்பாளா் அண்ணா அடைக்கலம், தொமுச தலைவா் அங்காளன், பிஆா்டிசி ஒருங்கிணைந்த போராட்ட குழு நிா்வாகிகள் வேலையன், ராஜேந்திரன், பாஸ்கரன், முத்துக் குமரப்பன், இளங்கோ, ஜெயசீலன், காா்த்திகேயன், தமிழ்ச்செல்வம், பிரதீஷ்குமாா், திருநாவுக்கரசு மற்றும் ஒப்பந்த ஊழியா்கள் பலரும் கலந்து கொண்டனா்.