Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
உருளையன்பேட்டை தொகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
புதுச்சேரி: புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட ராஜா நகா் பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையம் ராஜா நகா், முத்தமிழ் நகா், அருந்ததி நகா், அய்யனாா் நகா், டாக்டா்ஸ் காலனி, சஞ்சய் காந்தி நகா், மங்கள லக்ஷ்மி நகா், கண்ணன் நகா், சுப்பையா நகா் மற்றும் உருளையன்பேட்டை தொகுதியைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தொகுதி எம்எல்ஏ ஜி. நேரு, சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேல், இணை இயக்குநா் மருத்துவா் கோவிந்தராஜ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனா்.