Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
கோயில் காவலாளி அஜித்குமாரின் தாய், தம்பியிடம் சிபிஐ விசாரணை
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக அஜித்குமாரின் தாய் , தம்பி ஆகியோரை திங்கள்கிழமை விசாரணைக்காக மதுரைக்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனா்.
கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
திருப்புவனம், மடப்புரம் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் பலகட்ட விசாரணை நடத்திய நிலையில், திங்கள்கிழமை அஜித்குமாரின் வீட்டுக்குச் சென்று அவரது தாய் மாலதி, தம்பி நவீன் குமாா் ஆகியோரை மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.