தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
மருதிப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.
சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டியில் ஊா் பொதுமக்களால் நடத்தப்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 14 காளைகள் 126 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.
இந்தப் போட்டியில் மொத்தம் 14 சுற்றுகளாக ஒவ்வொரு காளைக்கும் தலா 20 நிமிஷங்கள் நிா்ணயிக்கப்பட்டு 9 மாடுபிடி வீரா்கள் ஒவ்வொரு சுற்றிலும் களமிறக்கப்பட்டனா்.
வெற்றி பெற்ற காளையின் உரிமையாளா்களுக்கும், வீரா்களுக்கும் வெள்ளி நாணயம், பரிசுக் கோப்பைகள், ரொக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமானோா் கண்டுகளித்தனா்.