பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை! ஏன்?
அஜித்குமாா் கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக அவரது தங்கை, ஆட்டோ ஓட்டுநா் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், இந்தக் கொலை குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த அஜித்குமாரின் சித்தி மகள் கீா்த்தி, மடப்புரம் கோயில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள கோசாலையிலிருந்து திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அஜித்குமாரை ஆட்டோவில் அழைத்துச் சென்ற ஓட்டுநா் அய்யனாா் ஆகிய இருவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினா். பின்னா், அவா்கள் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றனா்.