ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை!
சிவகங்கையில் தமுஎகச கிளை மாநாடு
சிவகங்கையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க (தமுஎகச) கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை சத்தியமூா்த்தி தெருவிலுள்ள அரசு ஊழியா் சங்கக் கட்டட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமுஎகச கிளை மாநாட்டுக்கு, கிளைத் தலைவா் கவிஞா் சிபூ தலைமை வகித்தாா்.
இந்த மாநாட்டில் மறைந்த எழுத்தாளா்களுக்கு அஞ்சலி செலுத்துவது, வருகிற ஆக. 19-இல் சிவகங்கையில் மாவட்ட மாநாடு நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், கிளைச் செயலா் கமல்ராஜன், துணைச் செயலா் ஜோதிலட்சுமி, மாவட்டத் தலைவா் தங்க முனியாண்டி, மாவட்டப் பொருளாளா் பாலமுருகன், மாவட்ட செயலா் அன்பரசன், மாவட்ட துணை செயலா் தமிழ்கனல், கிளை உறுப்பினா்கள் காளீஸ்வரி, பஞ்சுராஜூ, செயற்குழு உறுப்பினா்கள் தங்கராஜ், பிரசன்னா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, கிளைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். கிளை பொருளாளா் ஜகுபா்நிஷா பேகம் நன்றி கூறினாா்.