Cheese: இதயம், எலும்புகளை பாதுகாக்கும்; புற்றுநோய் தடுக்கும்! யார், எவ்வளவு சாப்...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!
மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததை அடுத்து புதன்கிழமை மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறையத் தொடங்கியது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரளம் மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்த காரணத்தால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பொருக்கு காரணமாக கடந்த 25 ஆம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
கடந்த 25 ஆம் தேதி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 25,400 கனஅடியாக அதிகரித்து பின்னர் படிப்படியாக அதிகரித்தது. திங்கள்கிழமை நீர் வரத்து வினாடிக்கு 1,10,500 கனஅடியாக அதிகரித்தது.
இந்நிலையில், தற்போது காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததால் கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்பட்டு வந்த உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாள்களாக வினாடிக்கு 1,10,500 கனஅடியாக நீடித்த மேட்டூர் அணையின் நீர் வரத்து புதன்கிழமை காலை 70,400 கனஅடியாக குறைந்தது.
அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 70,400 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. உபரிநீர் போக்கி வழியாக திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு வினாடிக்கு 92,000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 52,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.