செய்திகள் :

இன்று 14 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

post image

சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக, செவ்வாய், வியாழக்கிழமைகளில் (ஜூலை 29, 31) 14 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. மேலும், பயணிகளின் வசதிக்காக 13 சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கபடும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களில் செவ்வாய், வியாழக்கிழமைகளில் (ஜூலை 29, 31) காலை 9.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதன்காரணமாக அந்த நாள்களில் சென்ட்ரலிலிருந்து காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35 மணிக்குப் கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகா் மின்சார ரயில்களும், காலை 10.15 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 9.10, 9.55, 11.25, பகல் 12, பிற்பகல் 1 மணிக்கும், சூலூா்பேட்டையிலிருந்து காலை 10 மணிக்கும் சென்ட்ரல் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படும். அதேபோல், அந்நாள்களில் கடற்கரையிலிருந்து காலை 9.40 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கும், மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரை செல்லும் ரயில் என மொத்தம் 14 ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக செவ்வாய், வியாழக்கிழமைகளில் (ஜூலை 29, 31) சென்ட்ரலிலிருந்து காலை 8.05, 9, 9.30 மணிக்கு பொன்னேரிக்கும், காலை 10.30 மணிக்கு எண்ணூருக்கும், காலை 11.35 மணிக்கு மீஞ்சூருக்கும் சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

மறுமாா்க்கமாக பொன்னேரியிலிருந்து காலை 9.27, 10.13 மணிக்கும், மீஞ்சூரிலிருந்து காலை 11.56, பிற்பகல் 1.13 மணிக்கும், எண்ணூரிலிருந்து பிற்பகல் 12.43 மணிக்கும் சென்ட்ரலுக்கு ரயில்கள் இயக்கப்படும்.

மேலும், கடற்கரையிலிருந்து காலை 9.40 மணிக்கு மீஞ்சூருக்கும், பொன்னேரியிலிருந்து காலை 11.13 மணிக்கு கடற்கரைக்கும், சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 12.20 மணிக்கு சென்ட்ரலுக்கு என மொத்தம் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிசார் ரேடார் காலநிலை குறித்த தரவுகளை வழங்கும்: ஜிதேந்திர சிங்

புதுதில்லி: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 30 ஆம் தேதி ஏவப்படும் "நாசா-இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார் (நிசார்)" இந்திய-அமெரிக்க அறிவியல் ஒத்துழைப்புக்கான உலகளாவிய அளவுகோலாக இது திகழும். இந்த ரேடார் உலக அளவ... மேலும் பார்க்க

தஞ்சாவூர் மணிமாறன், நெசவாளர் நவீன் குமாருக்கு பிரதமர் பாராட்டு

இன்றைய தலைமுறையினருக்கு தமிழ் ஓலைச்சுவடிகளைப் படிக்க கற்றுக் கொடுத்து வரும் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சோ்ந்த மணிமாறன் மற்றும் பிகார் மாநிலம் சிலாவ் பகுதியை சேர்ந்த நெசவாளர் நவீன் குமாருக்கு பிரதமர் ந... மேலும் பார்க்க

நலம்பெற்று வீடு திரும்பினேன்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கடந்த திங்கள்கிழமை (ஜூலை 21) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு த... மேலும் பார்க்க

சிகிச்சை முடிந்து முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்புகிறார்

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஜூலை 21) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்ப... மேலும் பார்க்க

நீட் தோ்வில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்ற மாணவர்கள்: எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து

சேலம்: நீட் தோ்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சோ்ந்த மாணவா்கள் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி ... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் நீர்திறப்பு 75,000 கனஅடியாக அதிகரிப்பு!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 75,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்த... மேலும் பார்க்க