செய்திகள் :

நண்பரை தாக்கிய புகார்: வங்கதேச கிரிக்கெட் வீரர் மீது வழக்குப் பதிவு!

post image

வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது தன்னை கொடூரமாகத் தாக்கியதாக சிறுவயது நண்பர் ஒருவர் புகாரளித்துள்ள சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் மிர்புரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தஸ்கின் அகமதுவின் நண்பரான ஷிஃபதுர் ரஹ்மான் சௌரவ் என்பவர் வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

அந்தப் புகாரில் மிர்புரில் சினிமா ஹால் முன்னதாக வைத்து தஸ்கின் அகமது தன்னைக் கடுமையாகத் தாக்கியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் ஊடகக் குழுத் தலைவர் இப்திகார் அகமது கூறுகையில், “இந்தப் புகார் குறித்து விசாரித்து வருகிறோம். முழுமையான விசாரணைக்குப் பின்னரே முடிவு எட்டப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தீவிரமான நிலையில், தஸ்கின் அகமது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “உங்களிடன் ஒன்று வேண்டிக் கொள்கிறேன். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்.

இதுபோன்ற தவறான தகவல்களை நீங்கள் நம்பக் கூடாது. இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மரியாதை குறைவானதாகும். உண்மை ஒரு போதும் பொய்யாகாது. நீங்களும் உண்மையின் பக்கம் நிற்பீர்கள் என நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Bangladesh cricket team fast bowler Taskin Ahmed is currently facing legal trouble after a case was filed against him for allegedly assaulting 

இதையும் படிக்க :தென் ஆப்பிரிக்க டி20, ஒருநாள் தொடர்: பிக் பாஸ் நாயகனுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்திரேலியா!

தொடரை டிரா செய்யும் முனைப்பில் இந்தியா- இன்று கடைசி டெஸ்ட் தொடக்கம்

இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம், லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை (ஆக. 31) தொடங்குகிறது.மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் தற்போது இங்கிலாந்து 2... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்: பிளேயிங் லெவனில் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கோயம்புத்தூரைச் சேர்ந்த என். ஜெகதீசன் (29 ... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்டில் ஸ்டோக்ஸ் விலகல்..! இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள்!

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஓவல் டெஸ்ட்டிலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.மான்செஸ்டர் டெஸ்ட்டி... மேலும் பார்க்க

காலனித்துவ காலத்தில் இருக்கிறோமா? ஓவல் பிட்ச் மோதல் பற்றி முன்னாள் வீரர்!

ஓவல் பிட்ச் மேற்பார்வையாளுடன் நடந்த மோதல் குறித்து முன்னாள் இந்திய வீரர் காலனித்துவ காலத்திலா இருக்கிறோம் எனக் கூறியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி 2-1 என... மேலும் பார்க்க

டி20யில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா..! 4-ஆவது இந்தியராக சாதனை!

ஐசிசி டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். டி20 தரவரிசையில் நான்காவது இந்தியராக இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். பஞ்சாபில் அமிர்தசரஸைச் சேர்ந்த அபிஷேக் சர்மா (24 வ... மேலும் பார்க்க

9 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடர்: ஜிம்பாப்வே 4 விக்கெட்டுகளுக்கு தடுமாற்றம்!

நியூசிலாந்துக்கு எதிரான ஜிம்பாப்வேயின் முதல் டெஸ்ட்டில் மதிய உணவு இடைவேளை வரை 4 விக்கெட்டுகள் இழந்துள்ளது. ஜிம்பாப்வே-க்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விள... மேலும் பார்க்க