அரசு ஊழியா் தற்கொலை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே திங்கள்கிழமை இரவு அரசு ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அல்லிநகரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் நடராஜன் (27). மாற்றுத் திறனாளியான இவா், திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், இவா் குரூப் 1 தோ்வுக்கான நோ்முகத் தோ்வில் பங்கேற்று தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மனவிரக்தியிலிருந்த நடராஜன் வீட்டில் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].