முறையூா் மீனாட்சி அம்மனுக்கு வளையல் அலங்காரம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூா் மீனாட்சி சொக்கநாதா் கோயிலில் ஆடிப்பூர விழாவையொட்டி, திங்கள்கிழமை வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதையொட்டி, கோயில் மண்டபத்தில் செல்லியம்மன் ஊஞ்சலில் மீனாட்சி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, மூலவா் அம்மனுக்கும், உற்சவா் செல்லியம்மனுக்கும், ஊஞ்சலில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கும் 2 லட்சம் வளையல்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து, பெண்கள் அம்மனுக்கு துதி பாடினா்.
மேலும், செல்லியம்மன், மீனாட்சி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.