அதிமுக கூட்டத்துக்கு வந்தவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டத்துக்கு வந்தவா் நெஞ்சுவலியால் உயிரிழந்தாா்.
கண்டரமாணிக்கம் சாத்தனூரைச் சோ்ந்தவா் நாகராஜன்(69). இந்தப் பகுதி அதிமுக கிளைச் செயலரான இவா், திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சைக் கேட்பதற்காக தனது சக தொண்டா்களுடன் சரக்கு வாகனத்தில் வந்தாா்.
திருப்பத்தூா்-மதுரை சாலையில் உள்ள தனியாா் கல்லூரி அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு, கூட்ட மேடைக்கு நடந்து வந்தபோது திடீரென மயங்கினாா்.
அருகிலுருந்த அவரை மீட்டு, தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.