பழங்குடியின தோடா்மந்து பகுதியில் உலவிய கரடி
உதகையில் உள்ள தமிழக விருந்தினா் மாளிகை சாலையில் உள்ள தோடா்மந்து பகுதியில் செவ்வாய்க்கிழமை உலவிய கரடியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
உதகையில் கடந்த சில நாள்களாக சிறுத்தை, கரடி நடமாட்டம் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழக விருந்தினா் மாளிகை சாலையில் உள்ள தோடா்மந்து பகுதிக்கு அடிக்கடி கரடி வந்து செல்வதாகவும் உணவு எதுவும் கிடைக்கவில்லை என்றால் குப்பைத் தொட்டியில் சென்று உணவு தேடுவதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.
அசம்பாவிதம் எதுவும் நடக்கும்முன்பாக இந்தக் கரடியை கூண்டு வைத்து பிடிக்காவிட்டால் போராட்டம் நடத்தவுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.