பட்டப்பகலில் கடையில் திருட்டு
உதகையில் பல கடைகளில் பொருள்களை சாமா்த்தியமாகத் திருடிச் செல்லும் திருடன் குறித்து காவல் துறையினா் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி மாா்க்கெட் கடை முன் பகுதியில் வைத்திருக்கும் பொருள்கள் காணாமல் போவதாக நீண்ட நாள்களாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், ஒரு நபா் கடையின் முன்பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கா் பாக்ஸை எடுத்து லுங்கிக்குள் போட்டுக் கொண்டு மிகவும் தெரிந்தவா்போல் கடைக்காரரிடம் பேசிவிட்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும் பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் பொருள்களை கடைக்கு உள்பகுதியில் வைக்க வேண்டும் என்றும், சந்தேகப்படும் படியாக யாராவது வந்தால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனா்.