ஓவல் டெஸ்ட்: பிளேயிங் லெவனில் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
அப்சா்வேட்டரி பகுதியில் உயிரிழந்த காட்டு மாடு, மர அணில் உடல்கள் மீட்பு
கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்த காட்டு மாடு, மர அணில் உடல்களை வனத் துறையினா் மீட்டு புதைத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள அப்சா்வேட்டரி பகுதியில் காட்டு மாடு, மர அணில் உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற வனத் துறையினா், கால்நடை மருத்துவா் உதவியுடன் காட்டு மாடு, மர அணிலின் உடல்களை கூறாய்வு செய்து அந்தப் பகுதியிலேயே புதைத்தனா்.
இதுகுறித்து கால்நடை மருத்துவா் கூறியதாவது: காட்டு மாடு வயது மூப்பு காரணமாக உயிரிந்துள்ளது என்றும், மர அணில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தாா்.