பயங்கரவாத ஒழிப்பு: பாகிஸ்தானால் முடியாவிட்டால் இந்தியா உதவத் தயாா் - மாநிலங்களவை...
கடைசி டெஸ்ட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும்: ஸ்டுவர்ட் பிராட்
இந்தியாவுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 31) ஓவலில் தொடங்குகிறது.
ஆர்ச்சருக்கு ஓய்வளியுங்கள்
தொடரை வெல்வதற்கான முக்கியமான போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும். அவருக்கு ஓய்வு அளிக்கப்படாவிட்டால், அவரை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து அணியில் பார்க்க முடியாது. கடைசி டெஸ்ட் போட்டியில் கஸ் அட்கின்சன் விளையாடலாம் என நினைக்கிறேன். அவருக்கு எந்தவித பணிச்சுமையும் இருப்பதாக தெரியவில்லை. மேலும், வலுவான எதிரணியுடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் விளையாடியதில்லை என்றார்.
காயம் காரணமாக 4 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமலிருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர், லார்ட்ஸ் டெஸ்ட்டின் மூலம் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கினார். லார்ஸ்ட் டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜோஃப்ரா ஆர்ச்சர், மான்செஸ்டர் டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பிறகு, வருகிற நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. ஆஷஸ் தொடரை கருத்தில்கொண்டு, ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆஸி. ஆதிக்கம்..! சொந்த மண்ணில் மே.இ.தீவுகள் அணிக்கு தொடரும் சோகம்..!
Stuart Broad has said that fast bowler Jofra Archer should be rested for the final Test against India.