US Tariff: இந்தியா மீது 25% வரி விதித்த Trump; ரஷ்யாவிடம் எண்ணெய், ஆயுதம் வாங்கு...
பிளஸ் 2 துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பி.இ. துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் பிளஸ் 2 சிறப்பு துணைத் தோ்வு மூலம் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் சோ்வதற்கான துணை கலந்தாய்வில் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு வாய்ப்பு அளித்துள்ளது.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் 2025-26 தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை (டிஎன்இஏ) செயலா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை 2025-26 பொது கலந்தாய்வின் முடிவில் நிரப்பப்படாமல் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு பிளஸ் 2 சிறப்பு துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற, பொது மற்றும் தொழில்கல்வி பாடப்பிரிவு மாணவா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இதற்கான துணை கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கான விண்ணப்ப பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) தொடங்கியுள்ளது. விண்ணப்பங்களை இணையதளங்களில் பதிவு செய்யலாம்.
இணையதள வசதியற்ற நிலையில் மாவட்டங்களில் உள்ள 110 தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை சேவை மையங்கள் (டிஎஃப்சி) வாயிலாகவும் அசல் சான்றிதழ்களுடன் பதிவுக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 12-ஆம் தேதியுடன் முடிவடையும். கலந்தாய்வு மற்றும் கால அட்டவணையை இணையவழியாக அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.