செய்திகள் :

Akkenam: ``பெண்கள் சந்திக்கும் பிரச்னை தான் படத்தின் கதைக்களம்'' - நெல்லையில் நடிகர் அருண் பாண்டியன்

post image

நடிகர் அருண் பாண்டியன் தயாரித்து அவரது மகள் கீர்த்தி பாண்டியன் கால் டாக்ஸி டிரைவர் கதாப்பாத்திரத்தில் நடித்த ``அஃகேனம்'' திரைப்படம், வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.

இதையொட்டி படத்தின் புரோமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள பி.எஸ்.எஸ் திரையரங்கில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், படத்தின் இயக்குனர் உதயகுமார் ஆகியோர் ட்ரெய்லர் பாடல் காட்சிகளை ரசிகர்களுடன் கண்டு களித்தனர்.  

அருண் பாண்டியன்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அருண்பாண்டியன், “இந்த திரைப்படம் ஒரு உண்மைக்கதை. தலைநகர் சென்னைக்கு வருகிற ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்னையை மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கு பல்வேறு பிரச்னைகள் இருக்கிறது. குறிப்பாக கால் டாக்ஸி ஓட்டும் பெண்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர் இத்திரைப்படம் தமிழகம் முழுவதிலும் 200 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.

இந்த படத்தை திரையரங்கிற்கு வந்து ரசிகர்கள் கண்டுகளிக்க வேண்டும். தமிழகத்தில் சிறிய படங்களுக்கான திரையரங்கங்கள் கிடைப்பது இல்லை எனக்கூறப்பட்டாலும், எனது இந்த படத்திற்கு திரையரங்கம் கிடைத்துள்ளது.

நல்ல படங்கள் நிச்சயம் திரையரங்கில் அதிக நாள்கள் ஓடும். நீண்ட நாட்களுக்குப்பிறகு டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் நன்றாக ஓடியது. இந்த திரைப்படத்தில் ட்ரைலர் வெளியீட்டு விழா, பாடல் வெளியீட்டு விழா பெரிய நடிகர்களைக் கொண்டு வெளியிடப்படவில்லை.

அருண் பாண்டியன்

ஏனென்றால், எனக்கு சாதகமாக இந்த திரைப்படத்தைப் பற்றி உயர்வாகப் பேசுவார்கள். அப்படியெல்லாம் பேசி இந்த படத்தை ஓட வைப்பதற்கு எனக்கு பிடிக்கவில்லை.

பொதுமக்களே நேரடியாக இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே நல்ல படம் என்று சொல்ல வேண்டும். அதன் மூலமாக பொதுமக்கள் திரையரங்கிற்கு வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும்” என்றார்.

"தென்னிந்தியா இதுவரை கண்டிராத திறமையான நடிகை ஊர்வசி" - கண்கலங்கிய முன்னாள் கணவர் மனோஜ் கெ.ஜெயன்

கேரளாவைச் சேர்ந்த சினிமா நடிகர் மனோஜ் கெ. ஜெயன், அவரது முன்னாள் மனைவியான நடிகை ஊர்வசி ஆகியோரது மகள் தேஜா லட்சுமி.தேஜா லட்சுமியை குஞ்ஞாற்ற எனச் செல்லமாக அழைக்கிறார்கள். சுந்தரியாயவள் ஸ்டெல்லா என்ற சினி... மேலும் பார்க்க

`இளையராஜா சார் கேஷுவலா சொன்ன பேரு... மாத்தமாட்டேன்' - படம் இயக்கும் ‘16 வயதினிலே' டாக்டர் சத்தியஜித்

கமல்ஹாசன், ஶ்ரீதேவி ரஜினிகாந்த் நடிப்பில் பாரதிராஜா இயக்கிய தமிழ் சினிமாவின் எவர்கிரீன் படமான '16 வயதினிலே' வெளியாகி 48 ஆண்டுகள் ஆகின்றன. கமல், ரஜினிக்கு இணையாக இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியி... மேலும் பார்க்க