செய்திகள் :

"தென்னிந்தியா இதுவரை கண்டிராத திறமையான நடிகை ஊர்வசி" - கண்கலங்கிய முன்னாள் கணவர் மனோஜ் கெ.ஜெயன்

post image

கேரளாவைச் சேர்ந்த சினிமா நடிகர் மனோஜ் கெ. ஜெயன், அவரது முன்னாள் மனைவியான நடிகை ஊர்வசி ஆகியோரது மகள் தேஜா லட்சுமி.

தேஜா லட்சுமியை குஞ்ஞாற்ற எனச் செல்லமாக அழைக்கிறார்கள். சுந்தரியாயவள் ஸ்டெல்லா என்ற சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் தேஜா லட்சுமி.

இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் மனோஜ் கெ.ஜெயன் பேசுகையில், "படிப்பு முடிந்ததும் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்கும் என குஞ்ஞாற்ற தெரிவித்தார். இதை அம்மாவிடம் தெரிவிக்கவேண்டும்.

அதற்காக சென்னைக்குப் போகவேண்டும். ஊர்வசியிடம் ஆசீர்வாதம் வாங்கவேண்டும் என நான் மகளிடம் கூறினேன். தென்னிந்தியா இதுவரை கண்டிராத திறமையான நடிகை ஊர்வசி. அப்படிப்பட்டவரின் மகளை இப்போது..." எனக் கூறியபோது கண்கலங்கினார் மனோஜ் கெ.ஜெயன்.

நடிகர் மனோஜ் கெ.ஜெயன் அவரது மகள் தேஜா லட்சுமி
நடிகர் மனோஜ் கெ.ஜெயன் அவரது மகள் தேஜா லட்சுமி

அவரை அருகிலிருந்த மகள் தேற்றினார். பின்னர் மீண்டும் தொடர்ந்தவர், "நான் எமோஷன் ஆகிவிட்டேன். மகளின் விஷயங்கள் வரும்போதெல்லாம் நான் இப்படி ஆகிவிடுவேன். மகளின் அம்மா மகிழ்ச்சியாகச் சம்மதித்தார். அதைத்தொடர்ந்து இப்போது நடிக்கத் தயாராகிவிட்டார்.

எனது நண்பர்களான சேதுவும், அலெக்ஸும் இந்த சினிமாவுக்குப் பின்னால் இருந்து செயல்பட்டார்கள். மகளுக்காக ஒரு கதை கேட்கிறீர்களா என அவர்கள் என்னிடம் கூறினார்கள். ஊர்வசிதான் அந்தக் கதையை முதலில் கேட்கவேண்டியவர், அவர்தான் அதுபற்றி முடிவெடுக்க வேண்டும் என நான் சொன்னேன்.

பெண்ணுக்கான கதாபாத்திரத்தைத் தேர்வுசெய்வதில் ஊர்வசியைப் போன்ற அனுபவம் எனக்கு இல்லை. அம்மாவை அழைத்துக் கதை கேள் என மகளிடம் கூறினேன். ஊர்வசி கதை கேட்டபிறகுதான் நான் கதை கேட்டேன்.

நானும் ஊர்வசியும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துத்தான் பின்னர் கவனம்பெற்றோம். எங்கள் மகளுக்குக் கதாநாயகி ரோல் கிடைத்தது தெய்வத்தின் அருளும், அவளின் தாத்தாவின் அனுகிரஹமும்தான்.

குஞ்ஞாற்ற சினிமாவில் நடிக்க வேண்டும் என என் அப்பா ஆசைப்பட்டார். எங்களைப் போன்று சினிமாவில் அடியெடுத்துவைக்கும் என் மகளுக்கு அனைவரது ஆசியையும் வேண்டுகிறேன்" என்றார்.

மனோஜ் கெ ஜெயனுடன் குஞ்ஞாற்ற என்ற தேஜா லட்சுமி
மனோஜ் கெ ஜெயனுடன் குஞ்ஞாற்ற என்ற தேஜா லட்சுமி

சுந்தரியாயவள் ஸ்டெல்ல்லா சினிமா படப்பிடிப்பு ஜூலை இறுதியில் கொச்சியில் தொடங்க உள்ளது. தேஜா லட்சுமி என்ற குஞ்ஞாற்ற-வுக்கு ஜோடியாக சர்ஜானோ காலித் கதாநாயகனாக நடிக்கிறார்.

பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண் ஸ்டெல்லா பட்டாம்பூச்சி போன்று சிறகடித்துப் பறக்கிறார். ஸ்டெல்லாவின் வாழ்க்கையை நகைச்சுவை, எமோஷனலுடன் விவரிக்கும் இந்த சினிமாவுக்கு கதை எழுதிய பினு பீட்டர் புதுமுக இயக்குநராகவும் அறிமுகம் ஆகிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

`இளையராஜா சார் கேஷுவலா சொன்ன பேரு... மாத்தமாட்டேன்' - படம் இயக்கும் ‘16 வயதினிலே' டாக்டர் சத்தியஜித்

கமல்ஹாசன், ஶ்ரீதேவி ரஜினிகாந்த் நடிப்பில் பாரதிராஜா இயக்கிய தமிழ் சினிமாவின் எவர்கிரீன் படமான '16 வயதினிலே' வெளியாகி 48 ஆண்டுகள் ஆகின்றன. கமல், ரஜினிக்கு இணையாக இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியி... மேலும் பார்க்க

உலகத்தைப் பற்றிய பிம்பத்தை காட்டும் பயணம்! : மெய்யழகன் உணர்த்திய பாடம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க