இறுதியாக ஓடிடியில் மாமன்! வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாமன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதியை ஜி5 ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக வெளியான படம் மாமன்.
இந்தப் படத்தில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஸ்வாசிகா என முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் லட்டுவாக குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவன் கலக்கியுள்ளார்.
மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது ஜீ5 ஓடிடி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகவுள்ளதாக ஒரு மாதத்துக்கு முன்பே அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஒரு மாதமாக வெளியீட்டுத் தேதி குறிப்பிடாமல் இருந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருந்தனர்.
இந்த நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஜி5 ஓடிடி நிறுவனம் தெரிவித்துள்ளது.