எழுத்தாளா்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தி கலாப்ரியா: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்...
கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் சேர்ப்பு!
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 31 ஆம் தேதி முதல் ஓவலில் தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டான் சேர்க்கப்பட்டுள்ளார்.
31 வயதாகும் ஜேமி ஓவர்டான் இதுவரை இங்கிலாந்து அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். தொடரைக் கைப்பற்ற ஓவல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் அல்லது டிரா செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளதால், ஜேமி ஓவர்டான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
We've made one addition to our squad for the 5th Rothesay Test, which starts at the Kia Oval on Thursday.
— England Cricket (@englandcricket) July 28, 2025
See the squad
கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி விவரம்
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கோப் பெத்தேல், ஹாரி ப்ரூக், பிரைடான் கார்ஸ், ஸாக் கிராலி, லியம் டாஸன், பென் டக்கெட், ஜேமி ஓவர்டான், ஆலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ்.