செய்திகள் :

முதல் முறை... டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய பேட்டர்கள் புதிய சாதனை!

post image

இந்திய அணியின் பேட்டர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 31 ஆம் தேதி முதல் ஓவலில் தொடங்குகிறது.

இந்திய பேட்டர்கள் சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டர்கள் நான்கு பேர் 400 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளனர். டெஸ்ட் தொடர் ஒன்றில் இந்திய வீரர்கள் நான்கு பேர் 400 ரன்களைக் கடப்பது இதுவே முதல் முறையாகும்.

இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், துணைக் கேப்டன் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா நான்கு பேரும் 400 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளனர்.

இந்த டெஸ்ட் தொடரில் கேப்டன் ஷுப்மன் கில் (722 ரன்கள்), கே.எல்.ராகுல் (511 ரன்கள்), ரிஷப் பந்த் (479 ரன்கள்), ரவீந்திர ஜடேஜா (454 ரன்கள்) எடுத்துள்ளனர்.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்திய அணியின் முடிவு சரியே; ஆதரவளிக்கும் முன்னாள் வீரர்கள்!

The Indian team's batsmen have set a new record in Test cricket.

இங்கிலாந்தில் ஜடேஜாவின் தனித்துவமான சாதனை!

இங்கிலாந்தில் ரவீந்திர ஜடேஜா தனித்துவமான சாதனை நிகழ்த்தியுள்ளார்.மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து க... மேலும் பார்க்க

கடைசி டெஸ்ட்: ரிஷப் பந்த் விலகல்; தமிழக விக்கெட் கீப்பர் அணியில் சேர்ப்பு!

எலும்பு முறிவு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்... மேலும் பார்க்க

கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிய... மேலும் பார்க்க

இந்திய அணியின் முடிவு சரியே; ஆதரவளிக்கும் முன்னாள் வீரர்கள்!

போட்டியை முன்கூட்டியே முடித்துக்கொள்ளக் கூறிய இங்கிலாந்தின் முடிவை ஏற்காமல் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது சரியே என முன்னாள் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளு... மேலும் பார்க்க

5-வது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுகிறாரா? ஷுப்மன் கில் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்டில் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்பது குறித்து கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள்... மேலும் பார்க்க

முதல் சதமடித்த வாஷிங்டன் சுந்தர் - ஜடேஜாவும் சதமடித்து அசத்தல்! 4-ஆவது டெஸ்ட் டிரா!

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் ஆல் ரௌண்டர் வாஷிங்டன் சுந்தர் முதல் சதமடித்தார். ஜடேஜாவும் சதமடித்து அசத்தினார்.206 பந்துகளைச் சந்தித்த வாஷிங்டன் சுந்தர் தனது முதல் சதத்தை பதிவு செய்தா... மேலும் பார்க்க