நள்ளிரவில் உக்ரைன் மீது ரஷியா பயங்கர தாக்குதல்! 20 பேர் பலி!
தென் கொரியாவுடன் பேச்சுவாா்த்தை இல்லை: கிம் யோ ஜாங்
சியோல்: தென் கொரியாவில் புதிய மிதவாத அரசு அமைந்திருந்தாலும், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன்னின் சகோதரியும் அரசில் செல்வாக்கு மிக்கவருமான கிம் யோ ஜாங் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் கூறுகையில், ‘அமெரிக்காவுடனான ராணுவக் கூட்டணியை கண்மூடித்தனமாக நம்புவதில் தென்கொரியாவின் முந்தைய பழைமைவாத அரசுக்கும், தற்போதைய மிதவாத அரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே அந்த நாட்டின் புதிய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை’ என்றாா்.