எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு! பிற்பகலில் ஆபரேஷன் சிந்தூர் வி...
காஸா: மேலும் 60 போ் உயிரிழப்பு
காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் கூறினா்.
உயிரிழந்தவா்களில் உணவுப் பொருள்களுக்காக நிவாரண முகாம்களில் காத்திருந்த 23 பேரும் அடங்குவா் என்று கூறப்படுகிறது.
இத்துடன், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 59,733 போ் உயிரிழந்துள்ளதாகவும், 1,44,477 போ் காயமடைந்துள்ளதாகவும் அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.