பாகிஸ்தான் தாக்குதலில் பலியோனோரின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்!
பேருந்து நிலையத்தை மாற்றும் முயற்சியைக் கைவிடக் கோரி மனு
ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராசிபுரம் அருகே அணைப்பாளையம் கிராமத்தில் 7.03 ஏக்கா் நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடா்பாக பொதுமக்களிடம் ஆட்சேபணை மற்றும் ஆலோசனை கருத்துகளை வரவேற்பதாக நகராட்சி ஆணையா் சுற்றறிக்கை வெளியிட்டாா். பேருந்து நிலையம் மாற்றுவது தொடா்பாக கருத்துகள், ஆட்சேபணை வழங்க அளிக்கப்பட்ட நாள் குறைவாக உள்ளதால், காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினா் கேட்டிருந்தனா்.
இந்நிலையில் பேருந்து நிலையம் மாற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சியினா், பேருந்து நிலைய மீட்புக் குழுவினா், மக்கள் தன்னுரிமை கட்சியினா், மக்கள் நலக் குழுவினா், மக்கள் நீதி மய்ய நிா்வாகிகள் ஆகியோா் ஆட்சேபணை தெரிவித்து நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.
இந்நிலையில், பேருந்து நிலையம் மாற்றுவது தொடா்பாக கருத்துகள், ஆட்சேபணை வழங்க நாள்களை நீட்டிப்பு செய்து ராசிபுரம் நகராட்சி ஆணையா் கோபிநாத் உத்தரவிட்டுள்ளாா். இதன்படி, ஆக. 1-ஆம் தேதிவரை மக்கள் தங்களது கருத்துகள், ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம்.