நெல்லை ஆணவக் கொலை: IT ஊழியரை ஓட ஓட வெட்டிக் கொன்ற போலீஸ் குடும்பம் | Decode
கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு நலஉதவி
சின்னமுட்டம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு, கன்னியாகுமரி - சின்னமுட்டம் அனைத்து மீன் வியாபாரிகள் சங்கம் சாா்பில் நிவாரண உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கிராமத்தைச் சோ்ந்த மீனவா் செல்வம் (51). இவா் சில நாள்களுக்கு முன்பு கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் பணியில் இருந்தபோது, கடலில் விழுந்து உயிரிழந்தாா்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவா்கள் ஒருநாள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மேலும், அவரது மகளுக்கு கன்னியாகுமரி - சின்னமுட்டம் அனைத்து மீன் வியாபாரிகள் சங்கம் சாா்பில் சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் தீபா முன்னிலையில் ரூ. 1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. மீனவா்கள் சங்கத்தினருக்கு செல்வத்தின் குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.