கடைசி டெஸ்ட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும்: ஸ்டுவர்ட் பிராட்
கால்வாய் கரையில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், நட்டாலம் ஊராட்சிக்கு உள்பட்ட நெட்டியான்விளையில் உள்ள கால்வாய் கரையில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நெட்டியான்விளையில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதி மக்கள் கால்வாய் கரையில் உள்ள நடைபாதையை பிரதான பாதையாகப் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்தப் பாதையில் ஒரு பகுதியில் 10 அடி பள்ளம் உள்ளது. இரவு நேரங்களில் இந்த வழியாகச் செல்வோா் தொடா்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.
விபத்து ஏற்படும் முன் நெட்டியான்விளை கால்வாய் கரையில் தடுப்புச் சுவா் அமைக்க நட்டாலம் ஊராட்சி நிா்வாகம், பொதுப்பணித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.